Home » , » தனக்கென்று ஒரு காமெடி டீமை ஏற்படுத்தி கொண்ட பரோட்டா சூரி!

தனக்கென்று ஒரு காமெடி டீமை ஏற்படுத்தி கொண்ட பரோட்டா சூரி!


காமெடி நடிகர்கள் புகழ்பெறும்போது தனக்கென்று ஒரு காமெடி டீமை ஏற்படுத்தி அதன் மூலம் காமெடி சீன்களை உருவாக்கி நடிக்கிற வழக்கம் கவுண்டமணி – செந்தில் காலத்திலேயே வந்து விட்டது. வீரப்பன் என்பவர் தலைமையில் அமைந்த குழுதான் கவுண்டமணி செந்திலுக்கு காமெடி எழுதியது. அதற்கு பிறகு வடிவேலு, சந்தானம் ஆகியோரும் தங்களுக்கென்ற காமெடி டீம் வைத்திருந்தார்கள். வடிவேலுவுக்கு வாய்ப்பு குறைந்ததும் அவரது டீம் கஞ்சா கருப்புவிடம் போய்விட்டது. இப்போது இந்த வரிசையில் சூரியும் சேர்ந்து விட்டார். தனக்கு காமெடி காட்சிகளை எழுத ஒரு டீம் அமைத்து அவர்களுக்கு ஆபீசும் போட்டுக் கொடுத்திருக்கிறார். படத்தின் கதையை இயக்குனார் சொன்னதும். அந்த கதைக்கு ஏற்றமாதிரி அண்ணன் என்னென்ன காமெடி பண்ணலாம் என்று தம்பிகள் இரவு பகலாக தண்ணிய குடிச்சிக்கிட்டு (குடிதண்ணீர்தான்) யோசிச்சிசு சீன் பிடிக்கிறாங்க. “இதுவரைக்கும் என்னோட காமெடி சீனை நானேதான் யோசிச்சிக்கிட்டிருந்தேன். இப்போ நிறைய படங்கள்ல நடிக்கிறதால தனியா உட்கார்ந்து யோசிக்க முடியல. அதனாலதான் புதுசா ஆபீஸ் போட்டு ஒரு டீமையும் உருவாக்கிட்டேன். ஜனங்க சிரிக்கிற மாதிரி சீன் பிடிங்கன்னு சொல்லியிருக்கேன்” என்கிறார் சூரி.

comments