Home » , » ரசிகர்களுக்காக தயாராகிவிட்டது சுவையான பிரியாணி

ரசிகர்களுக்காக தயாராகிவிட்டது சுவையான பிரியாணி


கார்த்தி தனது ரசிகர்களுக்காக 1000 கடைகளில் பிரியாணி சப்ளை செய்யவுள்ளார். கார்த்தியின் தொடர் சரிவுக்கு பின்பு சுடசுட தயாராகியுள்ளது பிரியாணி திரைப்படம். இப்படத்தில் ஹன்ஷிகா கார்த்தியோடு ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் பிரேம்ஜி, ராம்கி, சம்பத், சுப்பு பஞ்சு, சம்பத், ஜெயபிரகாஷ், மதுமிதா, நிதின் சத்யா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜாவின் பிரம்மாண்ட தயாரிப்பில் காமெடி த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதன் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் ஏற்கெனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரியாணி யுவனின் இசையில் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கோலிவுட்டில் ஹாட் டாக் என்னவென்றால், இப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி கிட்டத்திட்ட 1000 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

comments