Home » , » நல்ல கதை, கேரக்டர் அமைஞ்சா நிச்சயம் சினிமாவில் நடிப்பேன்:உமா!

நல்ல கதை, கேரக்டர் அமைஞ்சா நிச்சயம் சினிமாவில் நடிப்பேன்:உமா!


தமிழ் சேனல்களில் பெரும் வரவேற்பை பெற்ற சித்தி இப்போது கன்னடத்தில் சித்தம்மா என்ற பெயரில் ரீமேக்காகி ஒளிபரப்பாகிறது. தமிழில் ராதிகா நடித்த கேரக்டரில் நடிக்கிறவர் உமா. மாஜி ஹீரோயின் சுமித்ராவின் மகள். தென்றல், மாணவன் நினைத்தால் உள்பட சில படங்களிலும் நடித்தவர். வள்ளி தொடரின் மூலம் தமிழ் சீரியலுக்கும் வந்திருக்கிறார். அவர் கூறியதாவது: 17 வயதில் தென்றல் படத்தில் அறிமுகமானேன் வயதுக்கு மீறிய கேரக்டர். அடுத்து என்னோட திறமையை புரூப் பண்ற மாதிரி கேரக்டர்கள் அமையல. கிளாமர் காட்டி நடிக்க புடிக்கல. அதான் சினிமா என்னை ஒதுக்குறதுக்கு முன்னாடி நானே ஒதுங்கிட்டேன். அப்புறம் கல்யாணம் குழந்தைன்னு சில வருடங்கள் எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டு, மனைவி, தாய்ங்கற என்னோட கடமைகைள செய்தேன். இப்போ டைம் இருக்கிறதால நடிக்கிறதுன்னு முடிவு பண்ணினேன். சித்தம்மாதான் முதல் சீரியல். அப்புறம் தமிழ்ல கூப்பிட்டாங்க வள்ளியில நடிக்கிறேன். மாதத்தில் பாதி நாள் சென்னையிலும் பாதி நாள் பெங்களூருவிலும் இருக்கிறேன். சினிமாலேருந்து விலகி வந்துட்டாலும் சினிமா மீது வெறுப்போ கோபமோ கிடையாது ஏன்னா எங்க குடும்பமே சினிமாவால வாழ்ந்த குடும்பம். இப்பவும் நல்ல கதை, கேரக்டர் அமைஞ்சா நிச்சயம் நடிப்பேன். என்கிறார் உமா.

comments