Home » , » ரஜினி படத்தில் டப்பிங் பேசும் ஆசையை கைவிட்ட தீபிகா படுகோனே

ரஜினி படத்தில் டப்பிங் பேசும் ஆசையை கைவிட்ட தீபிகா படுகோனே


பாலிவுட்டில் மோஸ்ட் வான்டட் நடிகையாக உருவெடுத்துள்ளார் தீபிகா படுகோனே. இவர் நடித்த படங்கள் நூறு கோடி வசூலை அள்ளுவதால், நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் உருவாகும் கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது யாவரும் அறிந்ததே. இந்த படத்தில் சொந்தமாக டப்பிங் பேச வேண்டும் என்ற தீராத ஆசையுடன் வலம் வந்து கொண்டிருந்தவர், அந்த முடிவை கைவிட்டுள்ளாராம். ஏற்கனவே வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில், தனக்கு தெரிந்த தமிழில் டப்பிங் பேசியிருந்தார். படத்தில் பார்த்தபோது அவர் பேசிய வசனங்கள் தமிழ் ரசிகர்களுக்கு சரியாகப் புரியவில்லை என வருத்தப்பட்டுள்ளாராம். இதுதான் இந்த அதிரடி முடிவுக்கு காரணமாம்.

comments