Home » » Kalyana Samayal Saadham Movie Review

Kalyana Samayal Saadham Movie Review


Kalyana Samayal Saadham - Making a perfect wedding With the wedding season for this year drawing to a close, here comes a well planned, meticulously arranged, perfect Tambrahm wedding without hitch. Well that's how it's made to look like. 'Achamundu Achamundu' paved the way for Prasanna to tie the knot with Sneha. Now the director brings a true to life reel marriage with the same actor, with a complete entertainer, 'Kalyana Samayal Saadham'. Like it was promoted in the trailers and as true as it really is, every girl child in south India is brought up with the dreams and ultimate goal of marriage. Meera is no exception to the rule. When her parents start outsourcing for the perfect groom, her dreams come into the picture. A bold software professional turned mechanical engineer, Meera develops instant liking to Raghu, as suspiciously arranged by the two sets of parents. But Raghu has to go a long way to actually impress Meera. In the eight months from betrothal to marriage, the hero finally achieves it. So it is a picture perfect dream come true wedding. Only until the couple discover Raghu's sensitive incapability, which comes as a hindrance to the dreamed perfection. Do they manage to keep it a secret? Does the wedding still go through? Is the problem solved? This is what the two hours is about. While the first half is considerably better entertaining than the second, most part of the movie is like actually being in a wedding house. All the incidents and the probable politics and misunderstandings between the two families and the gossips that go around, have been identified and highlighted in perfection. Prasanna with his smart charm and professional demeanour, is an apple of a groom. The actor has carried the essence of the story with the right emotions at the appropriate demanding situations. Lekha on the other hand is a gorgeous bride with her own girlish dreams and a strict sense of responsibility. Though the movie is entertaining on the whole, the story is very short, and not quite a subject to be understood by the little yet important ones in the family. Screenplay is funny and entertaining nevertheless. Arrora's music boosts the comedy appeal at the right places, while Krishnan Vasant and Sathyaraj have brought a real wedding ceremony on screen. With little surprises and lots of family confusion, 'Kalayana Samayal Saadham' is a light hearted romantic comedy, complete with the gala of marriage and sincerity of love. Rating : 2.75/5
 கல்யாண சமையல் சாதம் டேஸ்ட் ஒகே
 தன் கனவு கண்ணனைத் தேடிக்கொண்டிருக்கும் மீரா (லேகா வாஷிங்கடன்)வுக்கு பல மாப்பிள்ளைப் பார்க்கும் படலத்திற்கு பிறகு கடைசியில் பிடித்துப்போகிறார் ரகு (பிரசன்னா). ஆனால் திருமணத்திற்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் விளையாட்டில் இறங்க காதலின் கடைசி கட்டத்தை அடைந்துவிடுகிறார்கள். விளைவு ரகு தாம்பத்ய உறவுக்கு தகுதியில்லாதவர் என்று தெரிய வருகிறது. ரகுவைப் பற்றி மீரா என்ன முடிவு செய்கிறாள்? கல்யாண சமையல் சாதம்’ போடப்பட்டதா என்பதுதான் கதை. திருமணம் என்பது ஒரு புனிதமான சம்பிரதாயமாகத்தான் இன்று வரை நமக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. உண்மையும் அதுதான். அப்படிப்பட்ட திருமணத்தில் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் திருமணத்திற்குப் பிறகு வரும் பிரச்னைகளைத் திருமணமானவர்கள் புலம்பி கேட்டு இருக்கிறோம். ஆனாலும் யாருமே வாயைக் கூட திறக்க முடியாத ஒரு பிரச்னை இதுவரை உங்கள் காதுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அதுதான் தாம்பத்ய அந்தரங்கம். உளவியல் சார்ந்து இதுதான் மனிதனின் பெரும் பிரச்னை என்பது வேலை, கை நிறைய பணம், வசதியான வாழ்க்கை இவற்றை மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாய் நினைத்து ஓடிக்கொண்டிருக்கும் மனிதன் ஒத்துக்கொள்ள தயங்கும் உண்மை. வாய் திறந்தால் மானம் போய்விடும் என்றே பலர் வாழ்க்கை நாசமாகி இருக்கிறது. அந்தப் பிரச்னையை வாய்விட்டு பேசும் இந்த கல்யான சமையல் சாதம் உண்மையிலேயே பாராட்டக் கூடியதுதான். தாம்பத்ய தகுதியின்மை என்பது இன்றைய தலைமுறைக்கு ஒரு பெரும் பிரச்னையாக இருக்கிறது. மாறிவிட்ட வாழ்க்கைமுறை, உணவு முறை, வேலை பளு இவைதான் அந்த பிரச்னைக்கு காரணம் என்கிறார்கள் உளவியலாளர்கள். குறிப்பாக ஆண்களை உளவியல் ரீதியாக ரொம்பவே பாதிக்கிறது. நல்ல வேலை, அழகான பெண் கிடைத்தும் திருமணத்தின் போது அவர்கள் அடையும் பதட்டம் இருக்கிறதே, சொல்லி மாளாது. அதைப் பற்றிய சிறு புரிதலும் அந்த பிரச்னையை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு வழிகாட்டுவதும்தான் படத்தின் கரு. இதனை இயக்குனர் ஆர். எஸ். பிரசன்னா அழகான பின்னணியில் படம் பிடித்துக் காட்டுகிறார். இந்த கால கட்டத்திற்கு தேவையான பின்னணியில் ஒரு கதைக்களம், அழகான காட்சிகள், நகைச்சுவையானப் பாத்திரங்கள் என படத்தைக் கணக்கச்சிதமாக உருவாக்கியிருக்கிறார். திரைக்கதை சில இடங்களில் இழுவையாக இருந்தாலும் சில திருப்பங்கள் நகைச்சுவை காதல் காமம் என நகர்வதால் ரசிகர்களுக்கு அலுப்பு தட்டவில்லை. படம் நல்ல நோக்கத்தைக் கொண்டிருந்தாலும் விஷயம் மனிதனின் உறவுகள் சம்பந்தப்பட்டது என்பதால் செய்தி தவறாய் சென்று சேரவும் வாய்ப்பிருக்கிறது. நம்மவர்கள் இன்னும் பாலியல் கல்வி என்றால் என்ன என்பதையே தெளிவாகப் புரிந்துகொள்ளாத நிலையில்தானே இருக்கிறார்கள். அதுவும் இன்றைய ஃபேஸ்புக், டிவிட்டர், ஸ்கைப் ஆகியவற்றில் காதலிப்பதும் லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையும் ஆண் பெண் உறவில் இந்த பாலுறவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகிப் போகின்றன. அதனால் காதல் திருமணம் வரைப் போவதில்லை, இவன் இவ்வளவுதானா, இவள் அவ்வளவுதானா என்ற எண்ணம் வந்துவிடுகிறது. ஆனாலும் அதை சோதித்துப் பார்த்துவிட்டு திருமணம் செய்துகொள்ளும் முறை இன்னும் இங்கு வராத நிலையில் இந்தப் படம் ஆண்களுக்கு ஆண்மை தன்மை குறித்த எச்சரிக்கையையும் அதுபற்றி தன் மனைவியாகப் போகும் பெண்ணிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறுவதோடு, அது ஒரு பெரிய பிரச்னை இல்லை, உளவியல் ரீதியாக சரிசெய்யக் கூடியதுதான் என்று பெண்களுக்கு புரியவைக்கிறது. படம் வயது வந்தவர்களுக்கானது என்று சான்றளிக்கப்பட்டிருக்கிறது. எனவே குழந்தைகளைக் கூட்டிக்கொண்டுபோய் சங்கடங்களில் மாட்டிக்கொள்ள வேண்டாம். இந்தப் படம் குழந்தைகளுக்கானதல்ல. அவர்கள் கேள்விகேட்டால் விழிக்க வேண்டிவரும். நடிகர்கள் அந்தந்தப் பாத்திரங்களில் பொருத்தமாகப் பொருந்தியிருக்கிறார்கள். பிரசன்னா தன் நடிப்பைப் பாத்திரத்திற்கேற்ப அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தன்னால் முடியவில்லையே என்று பேசும் நேரத்தில் வேறு எதையோ சொல்ல வந்தாலும் அது அந்தரங்க அர்த்தத்தில் முடியும்போது வெட்கமடைவதிலும் அழகாக நடித்திருக்கிறார். நாயகி லேகா வாஷிங்டன் படத்திற்கு பெரும் பலம் பல் கொஞ்சம் எடுப்பாக இருந்தாலும் அழகில் மிளிர்கிறார். பிரசன்னாவின் பிரச்னை தெரிந்து ”அது மட்டும்தான் வாழ்க்கையா என்று கூறிவிட்டு உடனேயே பிளீஸ்டா எதாவது பண்ணு அது இல்லாம எப்படிடா” என்று கூறும்போதும் சராசரி பெண்ணின் நிலையை உணர்த்துகிறார். நாயகியின் தந்தை டெல்லி கணேஷ், பிரசன்னாவின் தாய் மற்றும் நண்பர்கள் என அனைவரும் தங்கள் பாத்திரங்களைச் செவ்வனே செய்திருக்கின்றனர். தேவையற்ற பாடல்கள் வைக்காமல் கதையோடு தொடர்புகொண்ட இரண்டு பாடல்கள் மட்டுமே அமைந்ததால் இசையமைத்த அரோராவின் இசைத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு குறைவாகவே அமைந்திருக்கும், ஆனாலும் பின்னணி இசையும் அந்தப் பாடல்களுக்கான இசையும் குறைசொல்லும் அளவுக்கு இல்லை. ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த், காட்சிகளுக்கு அழகாக வண்ணமளித்திருக்கிறார். சத்தியராஜின் எடிட்டிங் திரைக்கதையை குளறுபடி செய்யாமல் தெளிவாகக் கொண்டுசெல்கிறது. ஆனால் இழுவையைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். மதிப்பெண்: 3/5

comments