Home » , , » வீரத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம்

வீரத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம்


அஜித் படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு 'வீரம்' படத்தின் இசைக்கு பெரிதளவு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 'ஆரம்பம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அஜித் நடித்துள்ளப் படம் 'வீரம்'. 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் 'தல'யுடன், தமன்னா, சந்தானம், விதார்த், பாலா, அப்புக்குட்டி என பெரிய நட்ச்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இதன் டீசர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இதன் ஆடியோ உரிமையை கைப்பற்றிய 'ஜங்க்லீ' மியூசிக் நிறுவனம், வருகிற டிசம்பர் 20ஆம் தேதி இப்படத்தின் இசையை வெளியீட திட்டமிட்டுள்ளது. விவேகாவின் எளிமையான ஆனால் வலிமையான வரிகள் பாடல்களில் தெறித்துள்ளனர். நிச்சயம் இதன் பாடல்கள் அஜித் ரசிகர்களின் தேசிய கீதமாகவும், இசைப் பிரியர்களுக்கு இனிய விருந்தாகவும் இருக்கும் என படக்குழுவினர் உத்திரவாதம் தந்துள்ளனர். விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் திருமதி பாரதி ரெட்டி தயாரித்திருக்கும் இப்படம் வருகிற பொங்கல் ஜல்லிக்கட்டில் 'ஜில்லா'வுடன் களமிறங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

comments