Home » » Ivan Veramathiri - Review

Ivan Veramathiri - Review



Cast:
Vikram Prabhu, Ganesh Venkatraman, Vamsi Krishna
Direction:
M. Saravanan
Production:
N. Subash Chandrabose, N. Linguswamy, Ronnie Screwvala, Siddharth Roy Kapur
Music:
C. Sathya
Ivan Veramathiri - Review Trust Saravanan to bring you a gripping thriller, and he delivers bang on target. After the phenomenal success of 'Engeyum Eppodhum', the director is here with action and romance,.seasoned with comedy, in 'Ivan Veramathiri'. As it was quite predictable from the trailer, this movie is all about questioning injustice. But the difference lies in the uniqueness employed. Far from the rigmarole slapping and punching, 'Ivan Veramathiri' is an intellectual and meticulous plan to question the wrong and standing up for the right. Most youth movies begin in a college, and so does this. But this is vastly different from the regular ones. Law minister irks a riot in law college, and the action flick opens in a calamity among law college students, killing 3 and leaving scores injured. The city is unrest over the nonchalance of the cops who stood mere witness to the incident and not doing anything about it. Everyone wants to do something about the injustice, while Gunasekaran (Vikram Prabhu) actually does something. Unlike the normal fight at first sight, Guna follows Vamsi Krishna patiently until the moment is right to attack. With a murder on his name on the very day, Vamsi gets cornered at his gym's parking, where he gets beaten up, gagged and thrown into a dungeon, by a masked man. For the next six days, Vamsi spends his life without food and water, and tied down by ropes, by stench. Being the law minister's brother out on parole from his double life sentence, Vamsi is under strict deadlines to return to the jail. But as he remains kidnapped, he doesn't return, violating the law even further, also putting the law minister off his prized throne. Meeting at a quirky incident, followed by many other encounters, as though it was destined by the heavens, Guna sees Malini (Surabhi). Though the two develop mutual attraction, it is Malini who mouths it first. And all this in the same six days! On the seventh day Guna releases Vamsi on to the city roads, still gagged, and the latter vows to kill the masked man, no matter what. How he tracks him down forms the rest of the story. Strikingly different from his debut, Vikram Prabhu is a classy, suave Viscom grad, on the hunt for a job, apart from running an innovative venture in collaboration with his friends. Ranging between a committed, zealous, patriotic young man, and a sincere lover with boyish charm, Vikram does justice to every role he takes up. Action is his forte and both the primary fight sequences have been tailor made for the new action hero in town. Given that the actor has portrayed an array of different characters with class, in the film, Vikram sure is a man quite different and one to look out for. Vamsi Krishna on the other hand is a sheer show stealer! Be it the ruthless monster murdering on the go, or the monster in leash, Vamsi is the perfect villain for a hero like Vikram. His six days of toil in the dungeon spotlight his talent, especially in scenes where he observes amidst the echoes in the half constructed multi storey, plots to kill, diligently jumps to stand at elevation and notes down the slightest evidence, which later proves a turning point in his hunt, unnoticed. With his super built-up macho physique and vengeance clear in his eyes, Vamsi makes an excellent material for bad guy, as demanded by the script. Surabhi as Malini is a charm, making for the sugary sweet relief in the spicy action tale. She is not overly made up and is not glamorous in any frame of the film. Simple, homely and elegant, Surabhi is convincing of her role as an engineering student, who would go to any extent for love. Saravanan is known to make his stories gripping and racy. With Sakthi and Srikar Prasad for technical expertise, the director has re-established his name in the tinsel town with 'Ivan Veramathiri'. The film's screenplay slows down at places, but that is not entirely a shortfall. What is slightly disappointing is the logical continuity that takes a hit at a few places on screen. In this predominantly predictable story, there are only little twists and bends here and there, still adhering to the same thread of story. Gagged, yet in full consciousness to give a fight, Vamsi is thrown into the dungeon, carried to from a completely different ambience. The gym again is on a stilt, relative to the city traffic. Despite having feelings for Malini, Guna refuses to confess it, which happens suddenly over a tiny game of squash and he turns into a crazy lover at the other end of the song, presumably in the same week. All these could have received more care and attention. However, these hitches do not hamper with the movie experience at large. The film opens on a positive note, with a motive to spotlight crime and falacy under the government's collar, but later turns into a one-on-one, as sings one of the tracks. Speaking of music, Sathya's job on the title track and chase sequence carry a smart attitude. But songs on the other hand aliterate a bit from the olden books. Given that the film on the whole gives more importance to action than romance, patches that demand musical support have been backed with fresh creativity. The flick on the whole has only two major action sequences with edge-of-the-seat fight scenes, while most of the action is takes cover under the abhorrent aftermath thereof. Climax chase sequence has a twist that makes you sit up with your back straight; cinematography here is exceptionally good, covering all the tumbling vehicles, smashing property and flying people in perfect detail. After so much action and the arduous efforts to put the right on the face of the state, the evils seem to have been ripped off in a hurry in the end. The cop Aravindan (Ganesh Venkatraman) is introduced only in the second half; though he plays an urbane, sophisticated man with an astute attitude, Ganesh has only minimal screen presence. But for the while that he features, he entertains, particularly in the racy chase sequence. All said and done, 'Ivan Veramathiri' is different indeed, though reckonable. Rating - 3/5

இவன் வேற மாதிரி

 மறத்தல் என்பது மனிதன் மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு அவசியமான ஒரு ஆயுதம். ஆனால் 2009இல் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த மாணவர்களின் வன்முறையும் காவலர்கள் எல்லாரும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த சம்பவமும் மறக்கக்கூடிய விஷயமா என்ன என்று நம்மை நினைக்க வைக்கிறார் இயக்குனர் சரவணன், தன் ‘இவன் வேற மாதிரி’ படத்தின் மூலம். இப்போது படத்தின் கதையைப் பார்ப்போம். விஸ்காம் முடித்து வேலை தேடும் குணசேகரன் (விக்ரம் பிரபு), சட்ட அமைச்சர் சதாசிவம் தன் சுய லாபத்திற்காக சட்டக் கல்லூரியில் வன்முறையைத் தூண்டிவிட்டதை சராசரி மனிதனாகக் கடந்து போக முடியாமல் பழிவாங்க நினைக்கிறார். அதற்காக அமைச்சர் பரோலில் எடுத்துள்ள அவருடயை தம்பி ஈஸ்வரனைக் கடத்தி பரோல் காலம் முடியும்வரை மறைத்து வைக்கிறார். ஈஸ்வரனைக் காணாததால் சட்ட அமைச்சர் தன் பதவியை இழந்து கைதும் செய்யப்படுகிறார். கதை முடிந்துவிட்டதாக எண்ண வேண்டாம். அதற்கு பின் வெளிவந்த ஈஸ்வரன் (வம்சி) குணாவைப் பழி வாங்க நினைக்கிறார். இடையில் குணாவை பொறியியல் படிக்கும் அரியர்ஸ் மாலினி(சுரபி) காதல் செய்கிறார். இப்போது கதை எப்படி மாறும் என்பது உங்களால் ஊகிக்க முடிந்தாலும் முடிவு படத்தைப் பார்த்தால்தானே தெரியும். எங்கேயும் எப்போதும் படத்தில் அனைவரையும் ‘அட’ போட வைத்த இயக்குனர் எம். சரவணனின் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தை யுடிவி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ஒரு உண்மைச் சம்பவத்தைப் பின்னணியாக வைத்து கதையைப் பிண்ணியிருக்கிறார். சட்டக் கல்லூரி விவகாரம் மறந்திருந்தாலும் அதன் தாக்கம் இன்னும் நம் மூளையில் எங்கோ தங்கியிருப்பது, அந்தக் கோர காட்சியை அப்படியே அச்சு பிசகாமல் காட்சிப்படுத்தியிருப்பதைப் பார்க்கும்போது தெரிகிறது. படத்தின் கதைக்காக உண்மை காரணங்களைத் தவிர்த்து அந்தச் சம்பவத்திற்கான காரணங்களை அவரே பிண்ணி அதற்கு ஒரு தனி மனிதனின் பழி வாங்கலையும் தீர்ப்பாக எழுதியிருக்கிறார். நேருக்கு நேராக இது போன்ற சம்பவங்களைப் பார்த்து கொதித்தெழும் ஒரு சராசரி மனிதனின் கற்பனையில் மட்டுமே நடக்கக்கூடிய ஒரு நிகழ்வை திரையில் அழகாகப் படமாக்கியிருக்கிறார். தான் மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்களின் வரிசையில் இடம் பிடிக்க வேண்டும் என்ற விருப்பம் சரவணன், உண்மைச் சம்பவத்தைப் பின்னணியாக எடுக்கும் மணிரத்னத்தின் பாணியையும் அநியாயத்தை எதிர்க்கும் புத்திசாலி தனிமனிதன் என ஷங்கர் பாணியையும் இந்தப் படத்தில் கையாண்டிருக்கிறார். உண்மைச் சம்பவ பின்னணி, அநியாயம் எதிர்க்கும் தனிமனிதன், பழிவாங்குதல், கடத்தல் என படத்தின் கதைக் கேட்க பழையது போல் இருந்தாலும், திரைக்கதையின் கட்டமைப்பு, காட்சி அமைப்புகள், வசனங்கள், காதல், நகைச்சுவை ஆகியவற்றில் புதுமையைப் புகுத்தியிருக்கிறார். நகைச்சுவை நடிகர் என்று ஒருவரை படத்தில் வைக்காமல் படத்தில் வரும் பாத்திரங்களே நகைச்சுவை செய்வதும், நட்சத்திர மதிப்பை வைத்து படத்தை ஓட்டி விட நினைக்காத எண்ணமும்தான் இவரது தனி அம்சம். ஒரு கலையானது கலைஞன் மற்றும் படைப்பாளியோடு சேர்த்து ரசிகனையும் வளர்க்க வேண்டும் அந்த வகையில் இந்தப் படம் பாஸ் மார்க் வாங்குகிறது. ஆனாலும் எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் தடாலென்று நாயகன் செயலில் குதிப்பது கொஞ்சம் ஓவர்தான். அநியாயத்தைப் பற்றிய சுற்றியிருப்பவர்களின் புலம்பல்கள் மட்டுமே ஒருவன் இப்படிப்பட்ட செயல்களில் குதிப்பதற்கு போதுமானதாக இருக்காது. இந்தப் படம் முழுக்க முழுக்க எதார்த்த சட்டகத்துக்குள் நுழைக்க கூடாத படம். ஆனால் இந்தச் சட்டக்கல்லூரி விவகாரத்தைப் பின்னணியாக எடுத்துக்கொண்டு அரசையும் காவலர்களையும் நோக்கி கேள்விகள் எழுப்பப்பட்டதே தவிர யார் கிளப்பிவிட்டிருந்தாலும் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு சிந்தனை எங்கே போனது என்றோ? உடன் படிக்கும் சக மாணவனை அடித்துக் கொல்ல எப்படி மனம் வருகிறது என்றோ? ஒரு கேள்வியும் படத்தில் இல்லை. அதனாலேயே இயக்குனருக்கு இது கதை பிண்ண ஒரு வாய்ப்பாக மட்டுமே இருந்திருப்பதாகத் தெரிகிறது. எங்கேயும் எப்போதும் அரங்கை விட்டு வெளியேறிய போதும் ஏற்படுத்திய தாக்கத்தை இந்த இவன் வேற மாதிரி ஏற்படுத்தவில்லை. மறக்கக்கூடிய சம்பவமாப்பா இது என்றளவில் மட்டுமே முடிந்து போகிறது படம். ஆனால் அரங்கில் இருக்கும் நேரம் சுவாரஸ்யமாக விருவிருப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. விக்ரம் பிரபு அடக்கமான பாத்திரத்தில் பொருந்துவதோடு, ஆக்‌ஷன் காட்சிகளில் தேஜஸ் கண்களோடு கவர்கிறார். அவர் தன் உடம்பையும் நடனத்தையும் வளர்த்துக்கொண்டால் இன்னும் பிரகாசிக்கலாம். அறிமுகம் சுரபி தமிழுக்கு வந்த டெல்லி வரவு. நடிப்பிலும் அழகிலும் எந்தக் குறையும் இல்லை. நடனாமாடும் பாடல்கள் இல்லாததால் கவர்ச்சியிலும் நடனம் பற்றிய விமர்சனத்திலிருந்தும் தப்பித்தார். படத்தின் கடைசிக் காட்சிகளுக்காக ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார். வரும் காலம் வசந்தமாக வாழ்த்துக்கள். வில்லன் வம்சியின் நடிப்பும் மிரட்டலும் இவர்தான் படத்தின் நாயகனோ என்று எண்ண வைக்கிறது. படத்தின் பெரும்பான்மை பலத்தை இவரே தாங்குகிறார். ஐபிஎஸ் அரவிந்தனாக வரும் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் அனைத்துப் பாத்திரங்களுமே நம்மை காட்சிகளுக்கேற்ப கவர்கின்றன. சத்யாவின் பின்னணி இசை நன்று. பாடல்கள் சுமார்தான். படங்களில் பாடல்கள் தேவையா என்று விவாதங்கள் ஆரம்பித்துவிட்ட நிலையில் பாடல்களைப் பற்றி பெரிதாகக் கவலைப் பட தேவையில்லை. சக்தியின் கேமரா காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் பக்கா கட்டிங். படத்தில் முக்கியமாய் குறிப்பிட வேண்டியது சண்டைக் காட்சிகள். அதற்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். சட்டக் கல்லூரி மாணவர்களின் வன்முறையாகட்டும், கட்டி முடிக்கப்படாத கட்டிடங்களில் கம்பிகள் இரும்பு பழுப்புகளுக்கிடையில் நடக்கும் சண்டையாகட்டும் அருமையாகக் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். மொத்தத்தில் இவன் (கொஞ்சம்) வேற மாதிரி மதிப்பெண்: 3.25/5

comments